Latest Post

சேயா சவ்தமியின் வழக்குக்கு 15ம் திகதி இறுதித் தீர்ப்பு



கொடதெனியா சிறுமி சேயா சவ்தமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் முதல்தர கிரிக்கட் வீரர் மார்ட்டின் குரோ சற்றுமுன்னர் உயிரிழந்தார்

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான மார்ட்டின் குரோ - கடந்த சில வருடங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது அவருக்கு வயது 53.

நியூசிலாந்து அணி சார்பாக 77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய மார்ட்டின் குரோ 45.36 என்ற சராசரியில் 17 சதங்கள், 18 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 5444 ஓட்டங்களையும், 143 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 38.55 என்ற சராசரியில் 4 சதங்கள், 34 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 4704 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். 1996ஆம் ஆண்டு முதற்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற மார்ட்டின் குரோ, அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு மீள்வருகையொன்றை மேற்கொள்ள முயன்ற போதிலும், உள்ளூர்ப் போட்டியொன்றில் பங்குபற்றும் போது ஏற்பட்ட உபாதை காரணமாக மேலதிக போட்டிகள் எவற்றிலும் கலந்து கொள்ளவில்லை.

சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்! சவூதியில் உதவிய நல்லுள்ளங்கள்!



ரியாத்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் பணியாற்றியபடி ஷீலாரஞ்சனி(மனைவி) ஆஷா பிரியதர்ஷினி(மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவருக்கு அங்குள்ள சமூக நல அமைப்பான‌ இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார். இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். தொடர் முயற்சியின் பலனாக 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரியின் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார். பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இவர்களுக்கு உதவியாக‌ மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் செயல்பட்டனர்.

பாலஸ்தீனியர்களுக்காக 252 மில்லியன் யுரோவை நிதியாக அளித்தது ஐரோப்பியன் யூனியன் !



புருசெல்ஸ், மார்ச். 02-

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த அகதிகளின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக ஐரோப்பியன் யூனியன் 252.5 மில்லியன் யூரோவை நிதியாக அளித்துள்ளது. 

”இந்த நிதியின் மூலம், பாலஸ்தீனியம் மக்களின் கல்வி, சுகாதாரம், வறுமையில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஐரோப்பியன் யூனியன் உதவுகிறது.” என்று ஐரோப்பியன் யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் மோஹிரினி தெரிவித்தார். 

இதன் மூலம் பாலஸ்தீன அகதிகளின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்றும் கூறினார். 

மேலும், ”பாலஸ்தீன நிறுவனங்கள் நிச்சயம் வலிமையானதாகவும், ஜனநாயக தன்மையோடும், பொறுப்புடனும் வளர வேண்டும்” என்றும் மோஹிரினி தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு வழங்கப்படும் நிதியின் முதல் பகுதி என்று ஐரோப்பியன் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெடித்த வன்முறையில் 178 பாலஸ்தீனியர்கள் மற்றும் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்த சவூதி மன்னர் சல்மான்..!



உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா, அமெரிக்காவுக்கும் அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா,

ரஷ்யா ஆப்கானிஸ்தானை பிடித்த போது ரஷ்யாவை நிலைகுலைய ஒசாமா பின்லேடன் அவர்களை வைத்து ஆப்கானிஸ்தானை மீட்டது அமெரிக்கா, பின்னர் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆட்டிப்படைத்ததால் அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் யுத்தம் தொடங்கியது.

அதேப்போல் சோவியத் ரஷ்யன் தகர்க்கப்பட்டு 6 முஸ்லிம் நாடுகள் தனித்தனியாக உருவானது.

மேற்கண்ட சம்பவங்களையும், ரஷ்யா கம்யூனிஸ நாடு என்பதால் கம்யூனிஸ்ட் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கை என்பதையும் கூறி ரஷ்யாவோடு முஸ்லிம் நாடுகள் நெருங்காதவாறு செல்வ செழிப்புள்ள முஸ்லிம் நாடுகளை தன் வசம் வைத்துக்கொண்டது அமெரிக்கா,

முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா ஒருபுறம் நேச நாடுகளாக இருந்து கொண்டாலும் முஸ்லிம்களின் எதிரி நாடான இஸ்ரேலும் அமெரிக்காவின் கள்ள குழந்தையாகும்.

மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது போல் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இரட்டை வேடத்தையே போட்டு வருகிறது.

இதேநிலையில் தான் இத்தனை ஆண்டுகள் ஓடியது.

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 10 மாதத்தில் அவர் சவூதி அரேபியாவை மட்டும் முன்னேற்றவில்லை,

உலக அரசியலையே புரட்டிபோட்டு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்து விட்டார்.

நீண்டகால வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவுக்கு முதல் பாடத்தை கற்று கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா சவூதி அரேபியாவையும், ரஷ்யாவையும் ஒன்றினையாதவாறு ரஷ்யாவுக்கு கூடுதலாக 6 மாதம் பொருளாதார தடையை நீட்டித்துள்ளது.

இருப்பினும் சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாகவே இருக்கிறது. சவூதி அரேபியாவை பின் தொடர்ந்து பல்வேறு அரபு நாடுகளும் ரஷ்யாவுடன் கூட்டணி வைக்க தொடங்கி விட்டது.

இஸ்ரேலை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாலஸ்தீன், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை ரஷ்யா நேச நாடுகளாக ஒன்றிணைத்து கொண்டிருக்கிறது அல்லது இந்த ஒன்றிணைப்பை சவூதி அரேபியா மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது.

இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கதி கலங்கியுள்ளன.

எது எப்படியோ 60 ஆண்டுகால வெறியை தீர்க்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

இதனால் பதறி போன அமெரிக்கா முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வாரி கொட்டுகிறது,

ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது, பாலஸ்தீன் கொடியை ஐநாவில் ஏற்றியது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தியாவில் முஹம்மது அக்லாக் படுகொலைக்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது, இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம் பெருகி விட்டதாக குற்றம் சுமத்தியது,

அமெரிக்காவில் பக்ரீத்துக்கு விடுமுறை அறிவித்தது, வாட்ச் பையன் அஹமதுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து உபசரித்தது, அமெரிக்காவில் ஹிஜாபுக்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒபாமா பேசியது, அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் பன்றி கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஹலாலான உணவுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறது

இஸ்லாத்தை ஏற்ற, உலக அழகி (படங்கள்)




செக். குடியரசின் முன்னாள் அழகி இஸ்லாத்தை ஏற்றார்..!

Former Beauty Queen of Democratic Republic of Czechoslovakia, Marketa Korinkova embraced Islam after repenting to lead the life of Christianity. She said that she has decided to embrace Islam and settled down in Dubai relinquishing her native country. She also changed her name as Maryam. She said that the status given to Muslim women in Islam attracted her to accept this faith. She has been thinking of embracing this faith for the past three years. She made a public announcement in Dubai of her accepting Islam.


According to a report published in Arab Journal “Al Quds-al-Arabi”, in London, international fame production designer, super-model and film actress, Marketa Korinkova surprised her fans by making this announcement. She was elected Miss Universe in a beauty contest held in Italy, after which she gained international fame. Many multinational companies acquired her services for publicizing their products. Very soon, she became the super model. Hollywood also offered her to perform in their films. In the film ME90LOVE, she had played a key role. She held the position of Director of Prague’s Film Academy FAMU. She is an acclaimed international designer. She also has an advertising company in Prague. A noted company of Dubai, Ali and Sons Group of Companies appointed her as their Sales Manager.


She holds a master’s degree in English Literature from Charles University of Prague. Later, she did her MA in Production Designing from National Film and TV School of the Royal College of Arts, London. She also worked for BBC.


After getting the position of Miss World, she scaled greater heights but she said that despite having everything she was mentally upset. She tested everything to get rid of her internal restlessness. She resorted to drinking wine, playing music and gambling but the thirst of her soul could not rest. On the advice of one of her friends, she started studying various religions three years back. As a born Christian, she did not find solace in Christianity. Disappointed with Christianity, she started studying Islam. Her eyes were then opened. The status Islam has given to women attracted her and she decided to embrace Islam. After spending some time in UAE, she decided to settle down permanently in Dubai. She said that in her childhood she was told that Islam has not given any status to women. When she studied Islam, the truth was exposed that Islam has given a pious position to women whereas the west is playing with women in the name of freedom. She told that she has decided to settle down in Dubai so that she could get more of Islamic teachings. She expressed her feeling that for a long time there was a burden on her heart and she was restless without any reason. When she recited “Kalima”, her restlessness came to an end. She has given up western garments and started wearing hijab. When she posted her photographs with Hijab, millions of her fans got surprised. They thought that she has posted these pictures of her taking part in Arab fashion show. When she announced that she has embraced Islam and changed her name, their surprise increased.

தோள் கொடுத்த தூய நபி ﷺ அன்னவர்கள்




மக்காவின் வெற்றிக்குப் பின்னர் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒருவர் வருகை தந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை, எனக்கு இருக்க ஓர் இடமில்லை” என முறையிட்டு நின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள். “இதோ: இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளும்” எனக் கூறினார்கள். கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழை மனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்ப முனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் மன்பதையை வாழ்விக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். 

சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. வீட்டிற்கு முகடு அமைத்திடும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். அது உயரமாக இருந்ததால் எட்டவில்லை. 

இதனைக்கண்ட காத்தமுன்னபிய்யின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “நண்பரே! நான் கீழே அமர்ந்து கொள்கிறேன் நீர் என தோள்மீது ஏறி முகடு அமைத்துக்கொள்ளும்” என்றார்கள். 

அண்ணலாரின் மொழிகேட்டு அதிர்ந்து போன அத்தோழர், “என்ன தங்களின் புனிதமிகு தோள்களின் மீது ஏறியா நான் என வீட்டிற்கு முகடு அமைத்துக்கொள்வது? எனக்கு வீடே வேண்டாம்,” என அழுதவராகக் கூறலுற்றார். 

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரை சமாதானம் செய்து தம் புனித தோள்களில் ஏறி முகடு அமைத்துக் கொள்ள உதவினார்கள். 

அவரோ வேண்டா வெறுப்புடன் கண்ணீர் சிந்தியவாறு தோளின் மீதேறி முகடு அமைத்தார். 

உண்டா இப்படி ஒரு வரலாற்று நிகழ்ச்சி மற்றவர் வாழ்க்கையில்...?

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்கள், ஆனால், தம் தொண்டனுக்குத் தோள் கொடுத்த தலைவர் உண்டா? 



நன்றி -  Women of Islam

அன்பு - உன் எதிரியையும் அன்பனாக்கும்




அன்பு - உன் எதிரியையும் அன்பனாக்கும்

ஒரு நாள் காலைப் பொழுது. ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள். 

“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் கொடுத்தாள். 

“திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள்.

தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார். 

அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி முன்பு கூறியது போன்று கூறி கொண்டு வந்தார். பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பொறுமையோடும் புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார். 

கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் விடைபெற்றார்கள். 

மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள். 

கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்” என்று கூறினார். 

அப்போது நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரைவிட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான்தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார். 


இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 
1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள். 

2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.

3.கடைசியாக! தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார். 

***********************************************************************************

அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்
அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்
அன்பினால்: வேதனை சுகமாகும்

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி


நன்றி -  Women of Islam

​ பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வாழ்வில் நடந்த ஒரு படிப்பினை சம்பவம்




​கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்களும், ஹஸ்ரத் உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களும் மதீனத்து வீதியில் அஸர் தொழுகைக்கு பிறகு அளவளாவிக்கொண்டு உலா வருகின்ற சமயம், ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள், இருவருக்கும் ஸலாம் கூறி ஏதும் ரகசியம் பேசிக்கொண்டு செல்கிறீர்களா..? நானும் உங்களுடன் வரலாமா..? என வினவினார்கள்..

அவர்கள் இருவருடன் செல்ல அனுமதி பெற்று மூவரும் சென்றுகொண்டிருந்த சமயம் தெருக் கோடியில் கூன் விழுந்து குச்சி ஊண்டி புர்கா அணிந்த மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.



​பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள், “உமரே ..! அந்த மூதாட்டிக்கு ஐம்பத்தைந்து வயதிருக்குமா ..?” எனக் கேட்டார்கள். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “யா ரசூலுல்லாஹ் அந்த மூதாட்டிக்கு நடையெல்லாம் தளர்ந்து விட்டது எழுபத்து ஐந்து வயதிருக்கும்” என்றார்கள், “தாங்கள் இருவரும் சொல்வதைவிட அந்த அம்மாவிற்கு தொண்ணூற்று ஐந்து வயது இருக்கும்” என ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.

“அலியே ..! நாங்கள் இருவரும் மஸ்ஜிதிற்கு செல்கிறோம் நீங்கள் சென்று அந்த அம்மா யார் ..? அவர்களின் பெயர் என்ன ? என்ன வயது என கேட்டு வாருங்கள்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் பணித்தார்கள் ..! பெருமானார் அன்னவர்களின் கட்டளை அல்லவா என நினைத்து பின் தொடர்ந்தார்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.

​அந்த மூதாட்டி நேராக பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் வீட்டிற்குள் சென்றார்கள். அதை கண்ட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள். தன் மனைவி பாத்திமா நாயகியிடம் கேட்டு விபரங்கள் தெரிந்து கொள்ளலாமென வாசலிலேயே உட்க்கார்ந்து விட்டார்கள். வீட்டிற்குள் சென்ற மூதாட்டி வராததால், வீட்டின் கதவை தட்டினார்கள். “யார் அது..?” என உரத்த குரலில் அன்னை பாத்திமா நாயகி இடமிருந்த பதில் வந்தது, “நான்தான் உங்கள் கணவர் அலி” என பெயர் சொன்னார்கள்.
பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா தன் கணவருக்கு ஸலாம் சொல்லி உள்ளே அழைத்தார்கள். அப்போது ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள், “பாத்திமா இப்போது வயது முதிர்ந்த அம்மா ஒருவர் உள்ளே வந்தார்களே..? அவர்கள் எங்கே” என்று கேட்டார்கள். அதற்கு அன்னை பாத்திமா நாயகி, “ஓ'....அவர்களையா கேட்கிறீர்கள்...? அது நான் தான் அஸருக்கும் மஃரீபிற்கும் இடைப்பட்ட நேரத்தில் அவசியமான வேலையாக வெளியில் செல்ல வேண்டும் என்றிருந்ததால் அந்நிய ஆடவர்கள் நம்மீது தப்பான அபிப்பராயம் கொள்வார்களோ என்றெண்ணி கூனிக்குறுகி, குச்சி ஊண்டி கிழவிபோல நடந்து சென்று வந்தேன்” என்றார்கள்.

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஆச்சரியத்துடன், “உங்களின் தந்தை அன்னவர்கள் ஐம்பத்து ஐந்து வயது என்றும், ஹஜ்ரத் உமர் அவர்கள் எழுபத்தைந்து வயது என்றும், நான் தொண்ணூற்று ஐந்து வயது என்றும் கணக்கு போட்டுவிட்டு அல்லவா இங்கு வந்துள்ளேன்” எனக்கூறிவிட்டு,. “நான் சென்று பெருமானார் அன்னவர்களிடம் போய் இதை சொல்கிறேன்” என விரைந்தார்கள்.

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அருகில் வருவதற்கு முன்னரே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ''என் மகள் பாத்திமாவிற்கு தொண்ணூற்றி ஐந்து வயதிருக்குமா..?” என புன்னைகையுடன் கேட்டார்கள். 

“உங்களின் மகள் பாத்திமா என தெரிந்து தான் கேட்டீர்களா..? யா ரசூலுல்லாஹ்” என்றார்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள். 
“ஆம், அந்நிய பெண்களை பார்த்து வயதை கணக்கிட நாம் யார்? என் மகள் என்பதை அறிந்தல்லவா தாங்களை நான் அனுப்பினேன்” என அண்ணலார் அன்னவர்கள் திருவாய் மொழிந்தார்கள்.

இந்த நிகழ்வுகளின் மூலம் நாம் அறியப்படும் படிப்பினைகள்: 
சிலர் அன்னியப் பெண்களை பார்த்து வயதையும் வாலிபத்தையும் கணக்கிடுகின்றார்கள். அவர்களுக்கு அந்நிய பெண்களை பார்த்து ரசிக்க கூடாது என்றும், இருவர் சேர்ந்து சென்றால் அவர்களிடம் ஏதும் ரகசியம் பேசிக்கொண்டு செல்கிறீர்களா.? நான் உங்களுடன் சேர்ந்து வரலாமா என உத்தரவு பெற்ற பின்பே அவர்களுடன் சேர்ந்து செல்லுதல் உத்தமம் என்பதும், வீட்டுக்கதவை தட்டினால் வீட்டிலுள்ள பெண்கள் யார் அது? என உரத்தக்குரலில் கேட்க வேண்டிய நியதியும், வெளியில் நிற்பவர் நான் தான் என்று கூறுவதை விட அவரின் பெயரையும் இணைத்து கூற வேண்டும் என்பதையும், நம் வீடாக இருந்தாலும் வீட்டினுள் செல்லும் முன் அன்னியப்பெண்கள் (விருந்தினர்) யாரும் சில சமயம் வீட்டினுள் இருப்பார்கள் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு உத்திரவு பெற்றே உள்ளே செல்லவேண்டும் என்ற படிப்பினையும் நாம் பெற கடமைப்பட்டுள்ளோம்.

​பெருமானார் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மொழிகளையும் வழிகளையும் பின்பற்றக்கூடிய பாக்கியவான்களாக நம் அனைவர்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாகவும் ...! ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்!! 

​{ ரபீக் அஹமது ஃபைஜி }
 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Proudly powered by Rajarata Media
Copyright © 2016. my desgin - All Rights Reserved